Sunday, November 2, 2008

FADE IN - [பல வருடங்களுக்கு பிறகு - இன்று]

FADE IN

[பல வருடங்களுக்கு பிறகு - இன்று]


EXT. ROAD - KATHIPARA FLYOVER - DAY

ரெட் சிக்னல். ஹெவி ட்ரேப்பிக். ஆட்டோ தனியாய் சிக்னலை மீறி ரோட்டை கிழித்து பாய்கிறது. ட்ரேப்பிக் கான்ஸ்டபில் பின்னால் ஓடுகிறான்.

[கான்ஸ்டபில்]
நாய, நாய.. அடங்குடா.

EXT. CHENNAI ROAD - CONTINUOUS

ஆட்டோ சைக்கிளை இடித்து, ப்ளாட்பார்மில் தள்ளுகிறது.

[சைக்கிள்காரன்]
டாபரு, பஸ்சுல சாவடா.. பொறம்போக்கு.

EXT. CHENNAI ROAD - CONTINUOUS

ஆட்டோ வெள்ளை புல்லட்டை உரசுகிறது. ட்ரேபிக் இன்ஸ்பெக்டர் புல்லட்டை பேலன்ஸ் செய்கிறான். ஆட்டோ ஸ்பீட் எடுக்கிறது. இன்ஸ்பெக்டர் ஆட்டோவை விரட்டுகிறான். ஆட்டோவை தாண்டி, முன்னால் போய் இன்ஸ்பெக்டர் கை போட்டு ஆட்டோவை ஓரம் கட்டுகிறான். புல்லட்டை நிறுத்தி ஆட்டோவிடம் போகிறான்.

[ஆட்டோவில், ட்ரைவர் சீட்டில் துர்கா. ஆட்டோ பின் ஸீட்டில் ஆட்டோ ட்ரைவர்]

துர்கா (18, சிட்டி கேர்ள்) கண்ணடிக்கிறாள். ட்ரேபிக் இன்ஸ்பெக்டர் சன்க்ளேசை கழற்றுகிரான்.

[இன்ஸ்பெக்டர்]
ஆட்டோக்கு எந்த ஊரு?

[துர்கா]
(ஆட்டோவை ஹேண்டில் பாரை அசைத்தபடி)
ஆட்டோ இம்போர்டட். நான் பக்கா லோகல்.

சிரிக்கிறாள். ட்ரேப்பிக் மாமா இளிக்கிறான்.

[இன்ஸ்பெக்டர்]
ஆட்டோ எங்க போறாப்ல?

[துர்கா]
சவாரிக்கு போது..
(சிரிப்பு மறைந்து, கடுமையாய்)
டு யூ மைன்ட்?

முறைப்பு அதிகமாகிறது. ட்ரேப்பிக் இன்ஸ்பெக்டர் முகத்தில் நக்கல் முளைக்கிறது.

[இன்ஸ்பெக்டர்]
மீட்டருக்கு மேல சூடாருக்க.. புக் பண்டா?

ஆட்டோ ட்ரைவர் பின் சீட்டிலிருந்து வாக்கிங் ஸ்டிக்குடன் இறங்குகிறான்.

[ட்ரைவர்]
(இன்ஸ்பெக்டரிடம்)
மன்சிக்க சர், சின்ன பொண்ணு.

சலாம் போடுகிறான். இன்ஸ்பெக்டர் இளிப்பு அதிகமாகிறது.

[இன்ஸ்பெக்டர்]
சின்ன பொண்ணா? அப்ப சின்தா தான ருக்னும்.. பெர்சா ருக்கு?

[ட்ரைவர்]
(கோபமாய்)
சர்..

[இன்ஸ்பெக்டர்]
(சன்க்ளேஸ் மாட்டியபடி)
வாய சொன்னன்டா நொண்டி.

இன்ஸ்பெக்டர் ட்ரைவர் வாக்கிங் ஸ்டிக்கை தட்டி விடுகிறான். ட்ரைவரி தள்ளாடி கீழே விழுகிறான்.

துர்கா வேகமாய் வெளியே பாய்கிறாள்.

"ப்ளார்".

சன்க்ளேஸ் பறக்கிறது. இன்ஸ்பெக்டர் கண்ணத்தை பிடிக்கிறான்.

[துர்கா]
சின்னதா ருக்னுமா?

இன்ஸ்பெக்டர் இன்னும் அதிர்ச்சியில்.

[துர்கா]
(ட்ரைவரை தூக்கியபடி)
நீ பெர்சு தான? அப்றம் ஏன் எல்லாம் சின்தா ருக்கு?

[இன்ஸ்பெக்டர்]
ஹேய்...

[துர்கா]
மூளைய சொன்னன்டாங்...

இன்ஸ்பெக்டர் கை ஓங்குகிறான். துர்கா கையை பிடிக்கிறாள்.

[துர்கா]
கைய வச்ச.. உயிரோட போஸ்ட்மார்டம் பண்டுவன்.

கையை உதறி, பர்சை எடுத்து காட்டுகிறாள். போடோவில் தலைவர் சிரிக்கிறார். இன்ஸ்பெக்டர் போடோவை பார்த்து அதிர்கிறான்.

துர்கா ரூபாய் கட்டுக்களை அள்ளி இன்ஸ்பெக்டர் மூஞ்சியில் வீசுகிறாள். மாமா முகம் முழுக்க ரூபாய் நோட்டுகள் பறக்கிறது.

[துர்கா]
ஐசிஐசிஐ கரன்சி. சூடாருக்கு. பொறிக்க.

இன்ஸ்பெக்டர் முகம் வியர்க்க முழிக்கிறான். துர்கா சன்க்ளேசை இன்ஸ்பெக்டர் முக்த்தில் மாட்டுகிறாள்.

[துர்கா]
(சிரித்தபடி)
மாம்ஸ்.. சே சீஸ்.

வெறுங் கையில் க்ளிக் செய்கிறாள். இன்ஸ்பெக்டர் சிலையாய் நிற்கிறான். துர்கா ஆட்டோவில் ட்ரைவர் சீட்டில் அமர்கிறாள். ட்ரைவை பின் சீட்டில் அமர்கிறான்.

[ட்ரைவர்]
(இன்ஸ்பெக்டரிடம்)
சின்ன பொண்னுனன்.. கேட்டியா?

துர்கா சிரித்தபடி ஆட்டோவை கிளப்பி ட்ரைவருடன் மாயமாய் மறைகிறாள். மாமா சன்க்ளேஸ் கழற்றி முகம் துடைத்தபடி ஆட்டோவை வெறிக்கிறான்.

No comments: